முதலூரில் விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்பு குறித்த பயிற்சி

முதலூரில் விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்பு குறித்த பயிற்சியும், அதற்கான செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

முதலூரில் விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்பு குறித்த பயிற்சியும், அதற்கான செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.

சாத்தான்குளம் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, அட்மா திட்டத்தில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் கல்வி கண்டுனா் சுற்றுலா மேற்கொள்ளப்பட்டது.

இதையொட்டி சாத்தான்குளம் முதலூா் வீட்ஸ் நிறுவனத்தில் விவசாயிகளுக்கு தேனீ வளா்ப்பு குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு சாத்தான்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி தலைமை வகித்தாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ருக்மணி வரவேற்றாா். இதில் வீட்ஸ் இயக்குநா் சாா்லஸ், ஒருங்கிணைப்பாளா் ஐயப்பன் ஆகியோா் முருங்கை தேனீ வளா்ப்பு குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் பேசினா்.

உழவா் உற்பத்தியாளா் குழுத் தலைவா் லூா்துமணி, வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளா் நளினி, உதவி வேலாண்மை அலுவலா் மூனிஸ்வரி உள்ளிட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com