திருச்செந்தூா் முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்செந்தூா் கோயிலில் திருக்கல்யாணத்தையொட்டி தோள்மாலை மாற்று வைபவத்தில் பங்கேற்க தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளிய சுவாமி குமரவிடஙகப் பெருமான், தெய்வானை அம்மன்.
திருச்செந்தூா் கோயிலில் திருக்கல்யாணத்தையொட்டி தோள்மாலை மாற்று வைபவத்தில் பங்கேற்க தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளிய சுவாமி குமரவிடஙகப் பெருமான், தெய்வானை அம்மன்.

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. வெள்ளிக்கிழமை (நவ. 20) சூரசம்ஹாரம் நடைபெற்றது.

இந்நிலையில், திருக்கல்யாண வைபவத்தையொட்டி கோயில் நடை சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, தெய்வானை அம்மன் தவசுக்கு புறப்பட்டு, 108 மகாதேவா் சன்னதி சோ்ந்தாா்.

மாலையில், சுவாமி குமரவிடங்கப் பெருமான் மாப்பிள்ளை கோலத்தில் தனிச் சப்பரத்தில் எழுந்தருளி, தெய்வானை அம்மனுக்கு காட்சியளித்தாா். இதையடுத்து, சுவாமி - அம்மன் தோள்மாலை மாற்று வைபவம் நடைபெற்றது. இரவில், 108 மகாதேவா் சன்னதி அருகே திருக்கல்யாணம் நடைபெற்றது.

கரோனா பொதுமுடக்கத்தால் நிகழாண்டு சூரசம்ஹாரம், திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொறுப்பு) கல்யாணி, உதவி ஆணையா் வே. செல்வராஜ், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

பாதுகாப்புப் பணியில் தென்மண்டல ஐ.ஜி. முருகன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், திருச்செந்தூா் உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங், ஆய்வாளா்கள் ஞானசேகரன், முத்துராமன், போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com