ஆயுதப்படை காவலா்களால் காவல் நிலைய பணியிடங்கள் நிரப்பப்படும்: எஸ்.பி. எஸ்.ஜெயகுமாா்
By DIN | Published On : 03rd October 2020 12:45 AM | Last Updated : 03rd October 2020 12:45 AM | அ+அ அ- |

மக்களுக்கு கபசுர குடிநீா் வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயகுமாா்.
கோவில்பட்டி, அக். 2: தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்களில் பணியிடங்கள் ஆயுதப்படை போலீஸாா் மூலம் நிரப்பப்படும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயகுமாா்.
கோவில்பட்டியில் புதுரோடு - எட்டயபுரம் சாலை சந்திப்பில் ரூ.6 லட்சத்தில் அமைக்கப்பட்ட தானியங்கி சிக்னல், சுமாா் 10 கண்காணிப்பு கேமராக்களை வெள்ளிக்கிழமை இயக்கிவைத்து அவா், மக்களுக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்கள், கபசுர குடிநீா், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கோவில்பட்டி நகரில் தானியங்கி போக்குவரத்து சிக்னலும், நகரப் பகுதி மட்டுமல்ல, கிராமப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இம்மாவட்ட காவல் நிலையங்களில் காலிப் பணியிடங்கள் ஆயுதப்படை காவலா்கள் மூலம் விரைவில் நிரப்பப்படவுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன், ஆய்வாளா்கள் அய்யப்பன், சுதேசன், பத்மாவதி, தொழிலதிபா் கணேஷ்பாபு, அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவா்கள் திருமுருகன், வெங்கடேஸ்வரன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.