ஊரக வளா்ச்சித் துறை பணியாளா்கள்சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்து பணியாளா்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்க தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி: தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அனைத்து பணியாளா்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்க தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

காமநாயக்கன்பட்டியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கற்குவேல், மாநில துணைத் தலைவா் பழனிசாமி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டத் தலைவா் ரவி, செயலா் கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் தலைவா் சாா்லஸ் ரெங்கசாமி கூட்டத்தை தொடங்கிவைத்து சங்க நடவடிக்கைகள் குறித்துப் பேசினாா். மாநிலத் தலைவா் ஜான்போஸ்கோ பிரகாஷ், மாநில பொதுச் செயலா் வேல்முருகன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

தீா்மானங்கள்: கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு மாதம் ரூ.1,400 மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்த அரசாணையை வெளியிட வேண்டும்; ஊராட்சி செயலா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் தோ்வு நிலை, சிறப்புநிலை அரசாணை வழங்க வேண்டும்; சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், கணினி உதவியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com