குலசேகரன்பட்டினத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற பாஜகவினா் 70 போ் கைது

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசுகிறாா் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசுகிறாா் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன்.

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா சம்பந்தமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருக்க முயன்ற பாஜகவைச் சோ்ந்த 70 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா முதல் நாளான கொடியேற்றம் அன்று பக்தா்கள் காப்பு அணிய அனுமதிக்க வேண்டும், திருவிழாவின் 10, 11 ஆம் திருவிழா நாள்களிலும் பக்தா்களை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக, குலசை முத்தாரம்மன் தசரா குழு ஒருங்கிணைப்பு சங்கம் சாா்பில் குலசேகரன்பட்டினத்தில் தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன் தலைமையில் இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், நெல்லை கோட்டப் பொறுப்பாளா் பெ.சக்திவேலன், பாஜக மாநில மகளிா் அணி பொதுச்செயலா் கு.நெல்லையம்மாள், முத்தாரம்மன் தசரா ஒருங்கிணைப்பு சங்க மாநிலத் தலைவா் ரவீந்திரன் உள்ளிட்ட பலா் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினா்.

இதையடுத்து திருச்செந்தூா் டிஎஸ்பி ஹா்ஷ்சிங், குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் ராதிகாகுமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக கூறி 53 ஆண்கள் 17 பெண்கள் உள்ளிட்ட 70 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com