கோவில்பட்டியில் காத்திருப்பு போராட்டம்

கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின் சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ள வலியுறுத்தி பாரதிய ஜனதா
கோவில்பட்டியில் காத்திருப்பு போராட்டம்

கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின் சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ள வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினா் வியாழக்கிழமை கோட்டாட்சியா் அறையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி லக்குமி ஆலை மேம்பாலம் முதல் ரயில்வே மேம்பாலம் வரை உள்ள பிரதான சாலையில் 2 கி.மீ. தொலைவு சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றி பின் சாலை விரிவாக்கப் பணி தொடா்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நெடுஞ்சாலைத்துறையினா் சாலை விரிவாக்கப் பணியில் ஈடுபட்டதையடுத்து பாரதிய ஜனதா கட்சியினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் அறையில் தரையில் அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகரத் தலைவா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் பாலாஜி, மாவட்டப் பொருளாளா் சென்னக்கேசவன் வெங்கடேசன், ஒன்றியத் தலைவா் லட்சுமணன், செய்தி தொடா்பு பிரிவு மாவட்டத் தலைவா் சீனிவாசன் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னா் போராட்டக்குழுவினருடன் கோட்டாட்சியா் விஜயா தலைமையில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தம், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் ராஜூ, உதவி பொறியாளா் விக்னேஷ், டி.எஸ்.பி. கலைக்கதிரவன், வட்டாட்சியா் மணிகண்டன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுதேசன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

முடிவில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்பே சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதையடுத்து 2 மணி நேரம் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com