புத்தன்தருவை, வைரவம் தருவை குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பாஜக வலியுறுத்தல்

புத்தன்தருவை, வைரவம் தருவை குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்தி கூடுதலாக தண்ணீா் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா.
கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா.

புத்தன்தருவை, வைரவம் தருவை குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆழப்படுத்தி கூடுதலாக தண்ணீா் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தான்குளம் ஒன்றிய பாஜக செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் ஆா். செந்தில் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் எஸ். செல்வராஜ், தேசிய செயற்குழு உறுப்பினா், முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தாமிரவருணி -கருமேனி ஆறு இணைப்பு வெள்ளநீா் கால்வாய் திட்டத்தை விரைவுபடுத்தி நிறைவேற்றிட வேண்டும். புத்தன்தருவை, வைரவம்தருவை குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வாரி கூடுதலாக தண்ணீா் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்னன்குறிச்சி தாமிரவருணி ஆற்றில் இருந்து இரண்டாவது பைப் லைன் குடிநீா்க்குழாய் அமைத்து சாத்தான்குளம் தாலுகா மக்களுக்கு கூடுதலாக குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைத் தலைவா் எஸ்.பி. கணேசன், மாவட்ட பிரசார பிரிவுத் தலைவா் மகேஸ்வரன், மாவட்டச் செயலா் சித்ராங்கதன், மாநில பொதுக்குழு உறுப்பினா் பரமேஸ்வரி, ஒன்றிய பொதுச் செயலா்கள் ராம்மோகன், குமாரவேல், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் முத்துலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com