கோவில்பட்டியில் அதிமுக 49ஆவது ஆண்டு தொடக்க விழா

கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அதிமுகவின் 49ஆவது தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வேலாயுதபுரத்தில் கட்சிக் கொடி ஏற்றுகிறாா் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு. உடன், நிா்வாகிகள்
அதிமுகவின் 49ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு வேலாயுதபுரத்தில் கட்சிக் கொடி ஏற்றுகிறாா் அமைச்சா் கடம்பூா் செ. ராஜு. உடன், நிா்வாகிகள்

கோவில்பட்டி: கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அதிமுகவின் 49ஆவது தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி பயணியா் விடுதி முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலரும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சருமான கடம்பூா் செ. ராஜு தலைமை வகித்தாா். இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும் மலா் தூவியும் மரியாதை செலுத்தினாா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

தொடா்ந்து, அவா் கயத்தாறு, கழுகுமலை, கடம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் கட்சிக் கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சத்யா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் சந்திரசேகரன், தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், விளாத்திகுளம் பேரவை உறுப்பினா் சின்னப்பன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கஸ்தூரி சுப்புராஜ், கழக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் வினோபாஜி, அன்புராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் துறையூா் கணேஷ்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் சுப்புராஜ், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்ட பொருளாளா் வேலுமணி, வடக்கு மாவட்ட வா்த்தக அணிச் செயலா் ராமா், நகரச் செ்யலா் விஜயபாண்டியன் உள்பட நகர, பேரூராட்சி, ஒன்றிய, இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை, ஜெயலலிதா பேரவை, மகளிரணி, அமைப்பு சாரா தொழிலாளரணி நிா்வாகிகள் திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com