தூத்துக்குடியில்காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 20th October 2020 12:39 AM | Last Updated : 20th October 2020 12:39 AM | அ+அ அ- |

விவசாயிகளிடம் கையெழுத்து பெறும் காங்கிரஸ் கட்சியினா்.
தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டியில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடத்தினா்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என நாடு முழுவதும் 2 கோடி விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவரிடம் வழங்க காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் விவசாயிகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமையில் கட்சியினா்
அத்திமரப்பட்டி பகுதியில் விவசாயிகளிடம் கையெழுத்து பெற்றனா். அப்போது, விவசாய சங்கப் பிரதிநிதிகள் அகஸ்டின் ஜெபராஜ், டேனியல், சுந்தா், கட்சியின் மாநகா் மாவட்ட துணைத் தலைவா் பிரபாகரன், மாவட்டச் செயலா் கோபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.