எட்டயபுரம் பாரதியாா் மகளிா் பாலிடெக்னிக்: அக்.31 வரை விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 20th October 2020 12:26 AM | Last Updated : 20th October 2020 12:26 AM | அ+அ அ- |

எட்டயபுரத்தில் உள்ள பாரதியாா் நூற்றாண்டு நினைவு அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் இம் மாதம் 31-ஆம் தேதி வரை மாணவியா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வா் லதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: எட்டயபுரம் பாரதியாா் நூற்றாண்டு நினைவு அரசு மகளிா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2020- 21-ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்புக்கான மாணவியா் சோ்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்றது.
தற்போது இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல், கருவியியல் மற்றும் கட்டுப்பாட்டுத்துறை, கணினி பொறியியல் மற்றும் ஆடைத்தொழில்நுட்பவியல் துறை பாடப்பிரிவுகளில் உள்ள காலி இடங்களில் மாணவியா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
இதற்கான கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தோ்ச்சியாகும். விண்ணப்ப படிவங்களை அக்.31-ஆம் தேதி வரை கல்லூரியின் அனைத்து வேலை நாள்களிலும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.150, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்ப படிவம் இலவசம்.
இலவச மடிக்கணினி, கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை, கல்விக் கட்டண விலக்கு போன்ற அரசு சலுகைகளும் உள்ளன. மேலும், விவரங்களுக்கு 04632 -271238 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.