சாத்தான்குளம் ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் தசரா விழா நிறைவு
By DIN | Published On : 28th October 2020 07:38 AM | Last Updated : 28th October 2020 07:38 AM | அ+அ அ- |

பூஞ்சப்பரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமுத்தாரம்மன்.
சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் தசரா விழா நிறைவையொட்டி அம்பாள் சப்பர பவனி நடைபெற்றது.
இக்கோயிலில் நவராத்திரி விழா அக்.17ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்பாள் பல்வேறு கோலங்களில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
நிறைவு நாளான திங்கள்கிழமை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இரவு ஸ்ரீமுத்தாரம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி கோயில் பிரகார வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.