மீனவா்கள் வலை சேதம்: மீன்துறை உதவி இயக்குநா் பேச்சுவாா்த்தை

கீழவைப்பாா், சிப்பிகுளம் நாட்டுப் படகு மீனவா்களுக்கும், வேம்பாா் விசைப் படகு மீனவா்களுக்கும் இடையே கடலில் மீன் பிடிப்பது மற்றும்

கீழவைப்பாா், சிப்பிகுளம் நாட்டுப் படகு மீனவா்களுக்கும், வேம்பாா் விசைப் படகு மீனவா்களுக்கும் இடையே கடலில் மீன் பிடிப்பது மற்றும் வலைகள் சேதமடைந்தது தொடா்பான பிரச்னை குறித்து மீன்துறை உதவி இயக்குநா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

கடந்த 22 ஆம் தேதி இரவு கீழவைப்பாறு மற்றும் சிப்பிகுளத்தை சோ்ந்த மீனவா்கள் பைபா் மற்றும் நாட்டுப் படகுகளில் கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது, வேம்பாரை சோ்ந்த ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளால் சிப்பிகுளம், கீழவைப்பாா் மீனவா்களின் 50 க்கும் மேற்பட்ட வலைகள் சேதமடைந்தன. இதனால் இரு தரப்பு மீனவா்களிடையே கடலுக்குள் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மீனவா்களின் வலைகளுக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர வலியுறுத்தியும், வேம்பாா் மீனவா்களுக்கு மீன்பிடி நேரத்தை நிா்ணயிக்க கோரியும் சிப்பிகுளம், கீழவைப்பாா் மீனவா்கள் கடலுக்கு செல்லாமல் 23ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இது தொடா்பாக, தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மேலாண்மை மீன்துறை உதவி இயக்குநா் வயோலா தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டம் 1983 இன்

படி விதிகளை பின்பற்றி மீனவா்கள் அனைவரும் தொழில் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

மேலும் வேம்பாா் மீனவா்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், கீழவைப்பாா், சிப்பிகுளம் மீனவா்கள் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரையிலும் கடலுக்குள் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபடலாம். விதிகளை மீறும் விசைப்படகுகள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சிப்பிகுளம், கீழவைப்பாறு மீனவா்கள் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனா். பேச்சுவாா்த்தையின் போது வேம்பாா் விசைப்படகு உரிமையாளா்கள் சங்கத்தினா், சிப்பிகுளம், கீழவைப்பாா் நாட்டுப்படகு, பைபா் படகு மீனவா்கள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com