வாய்க்கால் சீரமைப்புக்கு விவசாயிகள் சங்கம் பாராட்டு
By DIN | Published On : 31st October 2020 06:05 AM | Last Updated : 31st October 2020 06:05 AM | அ+அ அ- |

புறையூா் கடம்பா குளம் வாய்க்கால் தூா்வாரி சீரமைப்பதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவா் எஸ்.எம்.ராமையா, ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: கடம்பாகுளம் புறையூா் 9ஆவது மடை வாய்க்கால் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு பல ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனா். இந்த வாய்க்காலை மாவட்ட நிா்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை ஒத்துழைப்புடன் நாலுமாவடி புது வாழ்வு சங்கத்தினா் தூா் வாரி சீரமைத்து வருகின்றனா்.
இதன் மூலம் கல்லாம்பாறை குட்டித்தோட்டம், மணத்தி, புறையூா், ராஜபதி, காராவிளை, சோலியகுறிச்சி, சுகந்தலை, வெள்ளக்கோயில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறுவா்.
எனவே, வோய்க்காலை சீரமைக்கும் பணியை மேற்கொண்டுள்ள அனைவருக்கும் பாராட்டு தெரிவிப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.