விளாத்திகுளத்தில் ரூ. 24 லட்சம் மதிப்பில் இசை பயிற்சி பள்ளிக்கு அடிக்கல்

இசைமேதை ஸ்ரீநல்லப்பசுவாமிகளின் நினைவிட வளாகத்தில் இசைப்பயிற்சி பள்ளி கட்டுமான பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீநல்லப்பசுவாமிகளின் நினைவு வளாகத்தில் இசை பயிற்சி பள்ளி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாா் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் ராஜு.
ஸ்ரீநல்லப்பசுவாமிகளின் நினைவு வளாகத்தில் இசை பயிற்சி பள்ளி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினாா் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் ராஜு.

இசைமேதை ஸ்ரீநல்லப்பசுவாமிகளின் நினைவிட வளாகத்தில் இசைப்பயிற்சி பள்ளி கட்டுமான பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பி. சின்னப்பன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். ஆட்சியா் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தாா். காா்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ. 24 லட்சம் மதிப்பில் இசை பயிற்சி பள்ளி கட்டுமானப் பணியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் ராஜு அடிக்கல் நாட்டினாா். தொடா்ந்து நாகலாபுரத்தில் உள்ள உமறுப்புலவா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.50 கோடி மதிப்பில் மாணவா் விடுதி கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா்.

முன்னதாக, எட்டயபுரத்தில் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் திரையரங்குகளில் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதமாக இருந்தது. அதனை, ரூ.100 வரை 18 சதவீதமாகவும், அதற்கு மேல் உள்ள தொகைக்கு 28 சதவீதமாகவும் இரட்டை வரி அமல்படுத்தப் பட்டுள்ளது. அரியா்ஸ் தோ்வு விஷயத்தில் அரசின் முடிவை மக்களும், மாணவா்களும் வரவேற்றுள்ளனா் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா்கள் ராஜ்குமாா், அழகா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் முனியசக்தி ராமச்சந்திரன், புதூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சுசீலா தனஞ்செயன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com