வ.உ.சி. சிலையை அகற்ற முயற்சித்தது கண்டிக்கத்தக்கது: சைவ வேளாளர் சங்க மாநிலத் தலைவர்

கோவில்பட்டி சைவ வேளாளர் சங்கக் கட்டடத்தில் தகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்ட சிலையை அகற்ற முயற்சி செய்தது கண்டிக்கத்தக்கது என்றார் சைவ வேளாளர் சங்க மாநிலத் தலைவர் புளியரை எஸ்.ராஜா.
சைவ வேளாளர் சங்க மாநிலத் தலைவர்.
சைவ வேளாளர் சங்க மாநிலத் தலைவர்.

கோவில்பட்டி சைவ வேளாளர் சங்கக் கட்டடத்தில் தகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்ட சிலையை அகற்ற முயற்சி செய்தது கண்டிக்கத்தக்கது என்றார் சைவ வேளாளர் சங்க மாநிலத் தலைவர் புளியரை எஸ்.ராஜா.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சைவ வேளாளர் சங்கக் கட்டடத்தில் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சைவ வேளாளர் சங்கக் கட்டடத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி வ.உ.சி. பிறந்த நாளன்று அவரது சிலை வைக்கப்பட்டு அவரது சிலைக்கு சங்க நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், செப்டம்பர் 8ஆம் தேதி வருவாய் துறையினர் மூலம் சிலையை அகற்ற முயற்சி செய்தது குறித்து விவாதிக்கப்பட்டது. 

தொடர்ந்து, இச்செயலைக் கண்டித்தும், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மனு அளித்தும் எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது குறித்தும் விவாதித்த பின்னர், வெள்ளிககிழமை கோவில்பட்டியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோரிடம் சிலையை திறக்க அனுமதி வழங்கக் கோரி கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்தனர். பின்னர், சங்க மாநிலத் தலைவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், தனியார் இடங்களில் சிலை அமைக்க அரசு அனுமதி தேவையில்லை.

தனியார் இடத்தில் சிலை அமைக்கப்பட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அச்சிலையை சமூக விரோதிகள் யாரும் சேதப்படுத்துவதற்கு வாய்ப்பில்லாத வகையிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை எழாதவாறும் உரிய பாதுகாப்புடன் சிலையை நிறுவி பராமரிக்க வேண்டும் என்று சிலை அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தும்படி தமிழக அரசின் அப்போதைய முதன்மைச் செயலர் அஷோக் வர்தன் ஷெட்டி நகராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு அறிவுரை வழங்கியுள்ளதாகவும், இது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டதை நினைவுகூறினார்.

தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த, தேசியப்பணியாற்றிய வ.உ..சி. சிலையை திறப்பதற்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com