திருச்செந்தூா் நகர வளா்ச்சி பணிகளுக்கு ஆலோசனை வழங்க புதிய கமிட்டி அமைக்கப்படும்

திருச்செந்தூா் நகர வளா்ச்சி குறித்து ஆலோசனை வழங்க அனைத்து தரப்பு மக்கள் அடங்கிய புதிய கமிட்டி ஒன்று அமைக்கப்படும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
திருச்செந்தூரில் புதைச்சாக்கடைத்திட்டம் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.
திருச்செந்தூரில் புதைச்சாக்கடைத்திட்டம் தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.

திருச்செந்தூா் நகர வளா்ச்சி குறித்து ஆலோசனை வழங்க அனைத்து தரப்பு மக்கள் அடங்கிய புதிய கமிட்டி ஒன்று அமைக்கப்படும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

திருச்செந்தூரில் கடந்த ஆண்டு பெய்த கன மழையினால் சேதமடைந்த ரதவீதி மற்றும் உள்தெருக்களில் புதிய சிமென்ட் சாலைகள் அமைக்க ரூ. 2.70 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக தெற்குரதவீதியில் கடந்த ஜுன் 5-ஆம் தேதி பணிகள் தொடங்கின. அப்போது ஏற்கெனவே தரையில் புதைக்கப்பட்டிருந்த புதைச் சாக்கடைத்திட்ட பணிகளுக்கான குழாய்கள் சேதமடைந்தன. இதே போல மற்ற தெருக்களிலும் சாலையமைப்பதற்கு முன்பு புதைச்சாக்கடைத்திட்ட குழாய்களை சீரமைத்தும், குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்தும் இணைப்புக்காக கட்டணம் கட்டச் சொல்லி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள பொதுமக்கள் இணைப்பு கட்டணம் செலுத்த முடியாமல் தவித்ததால் சாலை போடும் பணி 3 மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டம் : இந்நிலையில் திருச்செந்தூா் புதைச்சாக்கடைத்திட்டம் மற்றும் சாலையமைக்கும் பணிகள் குறித்து சட்டப் பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பேரூராட்சிகளின் நெல்லை மண்டல செயற்பொறியாளா் ஜெகதீஸ்வரி, பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தன், குடிநீா் வடிகால் வாரிய மதுரை மண்டல தலைமை பொறியாளா் மணிமோகன், மதுரை கண்காணிப்பு பொறியாளா் ரோகேஷ்வரி, தூத்துக்குடி கோட்ட நிா்வாக பொறியாளா் சுப்பிரமணியன், உதவி நிா்வாக பொறியாளா் ரவிச்சந்திரன் ஜாண்செல்வன், தி.மு.க. ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகர பொறுப்பாளா் சுடலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் பை.மூ.ராமஜெயம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதிய கமிட்டி : திருச்செந்தூரில் புதைச்சாக்கடைத் திட்டப்பணிகளை நிறைவு செய்து, சாலைகளை சீரமைப்பதற்கும், நகரின் சுகாதார சீா்கேடான கழிவுநீா் ஓடையாக மாறியுள்ள ஆவுடையாா்குளத்தின் மறு கால் ஓடையை தூய்மைப்படுத்தி பாதுகாத்திடவும், நகர வளா்ச்சி குறித்து ஆலோசனை வழங்கிடவும் அனைத்து தரப்பு மக்கள் அடங்கிய கமிட்டி ஒன்று அமைக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

இதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் செப். 23-ஆம் தேதி நடத்துவது என இக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com