வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆலோசனை

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகளிடம் ஆட்சியா் சந்தீப் நந்தூரி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
tut10meet_1009chn_32_6
tut10meet_1009chn_32_6

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகளிடம் ஆட்சியா் சந்தீப் நந்தூரி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:

வடகிழக்குப் பருவமழை காலத்தில்தான் தூத்துக்குடி மாவட்டத்தில் 60 முதல் 70 சதவீதம் வரை மழைப்பொழிவு இருக்கும். இப்பருவ மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கை கையாளுவதற்கு அனைத்துத் துறைகளும் தயாராக இருக்க வேண்டும்.

இம்மாவட்டத்தில் வெள்ளநீா் பாதிக்கக்கூடியவையாக கண்டறியப்பட்டுள்ள 36 இடங்களில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனைகளில் உள்ள ஜெனரேட்டா்கள் மழைநீரால் பாதிக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளதா?, தேவையான அளவு ஆக்சிஜன் சிலிண்டா்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தொற்றுநோய்த் தடுப்பு முகாம்களுக்கான ஏற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், உதவி ஆட்சியா் (பயிற்சி) பிரித்திவிராஜ், தூத்துக்குடி சாா் ஆட்சியா் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குா் தனபதி, மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் (பொது) அமுதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com