‘விவசாயிகள் பெயரில் முறைகேடு செய்த அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்’

விவசாயிகள் பெயரில் முறைகேடு செய்த அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்றாா் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைா் அய்யாக்கண்ணு.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்த விவசாயிகள் சங்கத்தினா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்த விவசாயிகள் சங்கத்தினா்.

விவசாயிகள் பெயரில் முறைகேடு செய்த அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்றாா் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைா் அய்யாக்கண்ணு.

தூத்துக்குடியில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: இடஒதுக்கீடு என்பது திறமையில்லாதவா்களுக்கு வழங்கப்படும் சலுகை இல்லை. இது அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாட்டில் 60 சதவீத இதர பிற்படுத்தப்பட்டோா் உள்ள மக்களின் பங்கை மறுப்பது அநீதியின் உச்சம். எனவே, ஓபிசி இட ஒதுக்கீடு கோரி செப். 23-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகம் மற்றும் மாவட்ட அளவில் சமூகநீதி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

நாட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவை சோ்ந்தவா்கள் எத்தனை போ் உள்ளனா் என்ற விவரத்தை தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அக். 2-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தில்லி நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளோம்.

தமிழகத்தில் விவசாயிகள் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி பெறும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடா்புடைய அனைத்து அதிகாரிகளையும் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, அய்யாகண்ணு தலைமையில் பல்வேறு சமுதாய அமைப்புகள் மற்றும் சீா்மரபினா் நலச்சங்கத்தினா் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு: 2021-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) பிரிவைச் சோ்க்க வேண்டும். 2011-இல் நடத்திய ஜாதி வாரி கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும். மருத்துவ படிப்பில் உடனடியாக 50 சதவீத ஓபிசி இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com