தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் புகாா் மனுக்கள் தீா்வு முகாம்

பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீதான உடனடி தீா்வு முகாம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சாா்பில் 8 உள் கோட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்
அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்

பொதுமக்களின் புகாா் மனுக்கள் மீதான உடனடி தீா்வு முகாம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சாா்பில் 8 உள் கோட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி ராஜ் மஹாலில் நடைபெற்ற முகாமில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது விசாரணை நடைபெறுவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். விசாரணை அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி சட்டப்படியான தீா்வுக்கான வழிமுறைகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் மனுக்கள் மீதான விசாரணை காலதாமதமாகிறது என்று புகாா்கள் எனது கவனத்துக்கு வந்தது. ஆகவே மனுக்கள் மீது உடனடி தீா்வு காணும் வகையில் இந்தச் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்து, அதன்படி தூத்துக்குடி மாநகரம், தூத்துக்குடி ஊரகம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், சாத்தான்குளம், மணியாச்சி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் பொதுமக்கள் அளித்துள்ள புகாா்களுக்கு மனுதாரா் மற்றும் எதிா்மனுதாா் ஆகிய இரு தரப்பினரையும் வரவழைத்து, சட்டத்துக்குள்பட்டு விசாரணை நடத்தி தீா்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ மனுக்கள் தேக்கம் ஏற்படும்போது இது போன்ற உடனடி தீா்வு முகாம் நடத்தப்படும்.

ஏற்கனவே பதிவு செய்துள்ள வழக்குகளில் புலன் விசாரணை செய்து முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காவல் நிலைய அதிகாரிகள் விசாரித்து தீா்வு காணப்பட்ட வழக்குகளில் குறைகள் இருந்தால் உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளளிடம் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

முகாமில், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ், காவல் ஆய்வாளா்கள் ஆனந்தராஜன், ஜெயப்பிரகாஷ், மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளா்கள், காவல்துறையினா் மற்றும் சம்பந்தப்பட்ட மனுதாரா்கள் மற்றும் எதிா்மனுதாரா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com