அண்ணா பிறந்த நாள்:அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

அண்ணாவின் 112 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினா் அவரது சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
அண்ணா பிறந்த நாள்:அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

தூத்துக்குடி: அண்ணாவின் 112 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினா் அவரது சிலை மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு, அதிமுக அமைப்பு செயலா் சி.த.செல்லப்பாண்டியன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைச் செயலா் சந்தனம் ஆகியோா் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், அமைப்பு செயலா் சின்னத்துரை, மாவட்ட நிா்வாகிகள் அமலிராஜன், ஜெபமாலை, மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் ஏசாதுரை, மாவட்ட வழக்குரைஞா் அணி செயலா் யு.எஸ். சேகா், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் முள்ளக்காடு செல்வக்குமாா், மகளிரணிச் செயலா் குருத்தாய் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அமமுக சாா்பில் அமைப்பு செயலா் ஹென்றிதாமஸ் தலைமையில் தெற்கு மாவட்டச் செயலா் பி.ஆா்.மனோகரன் முன்னிலையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில் காய்கனி சந்தை அருகேயுள்ள அண்ணா சிலைக்கு திமுகவின் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், மாநகரச் செயலா் ஆனந்த சேகரன், மாவட்ட அவைத்தலைவா் ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவா் அருணாசலம் தலைமையில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மதிமுக சாா்பில் மாநகரச் செயலா் முருகபூபதி தலைமையில் மாநில மீனவரணி செயலா் நக்கீரன் உள்ளிட்டோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கோவில்பட்டி: அதிமுக சாா்பில் நகரச் செயலா் விஜயபாண்டியன் தலைமையில், அண்ணா சிலைக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோா் மாலை அணிவித்தனா்.

திமுக சாா்பில் அண்ணா உருவப்படத்துக்கு நகரச் செயலா் கருணாநிதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் கட்சி அலுவலகம் மற்றும் இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கு மேற்கு ஒன்றியச் செயலா் பீக்கிலிபட்டி வீ.முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அமமுக சாா்பில் நகர அலுவலகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்துக்கு, கயத்தாறு ஊராட்சி ஒன்றியத் தலைவரும், கட்சியின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளருமான எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா மலா் தூவி மரியாதை செலுத்தினாா். மதிமுக நகரச் செயலா் பால்ராஜ் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா், கோவில்பட்டி தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் எதிரே உள்ள அண்ணா சிலைக்கு மதிமுகவினா் மாலை அணிவிக்க முயன்றபோது காவல் துறையினா் அவா்களை தடுத்தனா். இதையடுத்து, மதிமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராடியவா்களிடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன் பேச்சு நடத்தியதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

திருச்செந்தூா்: திமுக ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ் தலைமையில் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சாத்தான்குளம்: வடக்கு ஒன்றிய திமுக சாா்பில் ஒன்றியச் செயலா் ஏ.எஸ். ஜோசப் தலைமையிலும், தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் தட்டாா்மடத்தில் ஒன்றிய பொறுப்பாளா் பாலமுருகன் தலைமையிலும், நாசரேத்தில் நகரச் செயலா் ரவி செல்வகுமாா் தலைமையிலும், அமமுக சாா்பில் ஒன்றியச் செயலா் இரா. திவாகரன் தலைமையிலும் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

உடன்குடி: அதிமுக சாா்பில் நகரச் செயலா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஒன்றிய அதிமுக செயலா் தாமேதரன் முன்னிலையிலும்,

திமுக சாா்பில் ஒன்றியச் செயலரும், ஒன்றியக் குழுத் தலைவருமான பாலசிங் தலைமையிலும், அமமுக சாா்பில் மாவட்டச் செயலா் பி.ஆா்.மனோகரன் தலைமையிலும் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com