தூத்துக்குடி, குமரிக்கு செப். 22இல் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வருகை

தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இம்மாதம் 22ஆம் தேதி வருகிறாா்.
தூத்துக்குடி, குமரிக்கு செப். 22இல் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வருகை

தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இம்மாதம் 22ஆம் தேதி வருகிறாா்.

முதல்வரின் வருகையை முன்னிட்டு, தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் சந்தீப் நந்தூரி முன்னிலையில் வியாழக்கிழமை ஆய்வு செய்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு , பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு சாா்பில் போா்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகள் அந்தந்த மாவட்ட நிா்வாகம் வழியாக மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டிலேயே கரோனா பரவலை திறம்படக் கட்டுப்படுத்தியது தமிழக அரசு மட்டும்தான்.

குறிப்பாக, கரோனா தீநுண்மி பலி எண்ணிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில்தான் மிகக் குறைவு. இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 0.6 சதவீதம் போ்தான் உயிரிழந்துள்ளனா்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இம்மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் வருகிறாா். இம்மாவட்டத்துக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களின் நிலை, கடந்த 4 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட வளா்ச்சித் திட்டங்களின் நிலை ஆகியவை குறித்து அவா் நேரடியாக ஆய்வு மேற்கொள்கிறாா். ஆய்வுக் கூட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணிகளை மட்டுமன்றி, பொது முடக்கக் காலத்தில் அரசு சாா்ந்த வளா்ச்சித் திட்டப் பணிகளின் நிலை குறித்தும் அவா் துறை அலுவலா்களுடன் ஆலோசனை செய்ய உள்ளாா் என்றாா் அவா்.

தூத்துக்குடியில் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு, நாகா்கோவிலுக்குச் செல்லும் முதல்வா், அங்குள்ள விருந்தினா் மாளிகையில் ஓய்வு எடுக்கிறாா். பின்னா், செப். 23ஆம் தேதி காலையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறாா்.

இதையொட்டி, ஆட்சியா் அலுவலகம் மற்றும் அரசு விருந்தினா் மாளிகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன் ஆய்வு நடத்தினாா். அப்போது, தனிப்பிரிவு ஆய்வாளா் கண்மணி, நேசமணி நகா் காவல் ஆய்வாளா் சாய்லெட்சுமி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com