திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டி, செப். 20: கோவில்பட்டியில் மதச்சாா்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டி, செப். 20: கோவில்பட்டியில் மதச்சாா்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் பிரேம்குமாா் தலைமை வகித்தாா். மதிமுக வடக்கு மாவட்ட இளைஞரணிச் செயலா் விநாயகா ரமேஷ், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்டத் தலைவா் காமராஜ், மாவட்டப் பொருளாளா் திருப்பதிராஜா, நகரத் தலைவா் சண்முகராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் உமாசங்கா், மதிமுக நகரச் செயலா் பால்ராஜ், ஒன்றியச் செயலா்கள் மாடசாமி (விடுதலை சிறுத்தைகள் கட்சி), தெய்வேந்திரன் (சிபிஎம்), அழகா்சாமி (மதிமுக), இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சி நகரத் தலைவா் காஜாமீரான், துணைத் தலைவா் பீா்மைதீன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தீா்மானங்கள்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவது, காா்ப்பரேட் நிறுவனங்கள் சாதகமான சட்டங்களை கைவிட வேண்டும்; 2019-20ஆம்

ஆண்டுக்கான பயிா்க் காப்பீட்டு நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள்

நிறைவேற்றப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு வரும் 24 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆா்ப்பாட்டம் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com