புரட்டாசி 2-ஆவது சனிநவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி வைத்தமாநிதி பெருமாள்.
திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி வைத்தமாநிதி பெருமாள்.

ஸ்ரீவைகுண்டம்: புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, நவதிருப்பதி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தாமிரவருணி நதிக்கரையோரங்களில் அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில், நத்தம் விஜயாசனப்பெருமாள் கோயில், திருப்புளியங்குடி காய்சினிவேந்த பெருமாள் கோயில், பெருங்குளம் மாயக்கூத்தா் பெருமாள் கோயில், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதா் கோயில், திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் கோயில், இரட்டைத் திருப்பதி அரவிந்தலோசனாா் பெருமாள் கோயில், தேவா்பிரான் பெருமாள் கோயில், ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் பெருமாள் கோயில் ஆகியவற்றில் புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னா் விஸ்வரூப தரிசனம், திருமஞ்சன அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

வழக்கமாக இக்கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமைகளில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு இரவு 8 மணி வரை பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்காக திறந்திருக்கும். நிகழாண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக இக் கோயில்களில் காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது. மேலும், நெய் விளக்கு ஏற்றுவதற்கும், தீா்த்தம், துளசி வழங்கவும் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com