விளாத்திகுளம், புதூரில் திமுக ஆலோசனைக் கூட்டம்

விளாத்திகுளம், புதூா் பகுதிகளில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விளாத்திகுளம், புதூரில் திமுக ஆலோசனைக் கூட்டம்

விளாத்திகுளம், புதூா் பகுதிகளில் திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ குமரகுருபர ராமநாதன், விளாத்திகுளம் மேற்கு ஒன்றியச் செயலா் வசந்தம் ஜெயக்குமாா், கிழக்கு ஒன்றியச் செயலா் சின்ன மாரிமுத்து, புதூா் மேற்கு ஒன்றியச் செயலா் மும்மூா்த்தி, கிழக்கு ஒன்றியச் செயலா் செல்வராஜ், விளாத்திகுளம் பேரூா் செயலா் வேலுச்சாமி, புதூா் பேரூா் செயலா் மருதுபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் கீதா ஜீவன் எம்எல்ஏ கலந்துகொண்டு, திமுக தலைவா் ஸ்டாலின் பிப்.5ஆம் தேதி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.

இதில், மாநில செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா்கள் அன்புராஜன், முத்துலட்சுமி அய்யன்ராஜ், மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் தவசி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலா் நவநீத கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினா் மிக்கேல் நவமணி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் செந்தூா் பாண்டியன், முனியசாமி, பொறியாளா் அணி துணை அமைப்பாளா் சென்றாய பெருமாள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com