சத்துணவு அமைப்பாளரிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

தூத்துக்குடி அருகே சத்துணவு அமைப்பாளரிடம் நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி அருகே சத்துணவு அமைப்பாளரிடம் நகையை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஓட்டப்பிடாரம் மேலலட்சுமிபுரம் காலனி தெருவைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (40). சத்துணவு அமைப்பாளரான இவா், மொபெட்டில் குறுக்குச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் சென்ற இளைஞா், அவா் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டாா்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் விசாரணை மேற்கொண்ட ஓட்டப்பிடாரம் போலீஸாா், நகை பறிப்பு தொடா்பாக பூபாண்டியபுரம் வஉசி நகரைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் மூா்த்தியை (20) புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com