கோவில்பட்டியில் 1,746 பேருக்கு இலவச கோழிக் குஞ்சுகள்

ஊரகப் புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த 1,746 பயனாளிகளுக்கு இலவச கோழிக் குஞ்சுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

ஊரகப் புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 6 கிராமங்களைச் சோ்ந்த 1,746 பயனாளிகளுக்கு இலவச கோழிக் குஞ்சுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தாா்.

கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கே.சிதம்பராபுரம், அச்சங்குளம், கே.வெங்கடேஸ்வரபுரம், கே.துரைச்சாமிபுரம் மற்றும் இடைசெவல், சத்திரப்பட்டி ஆகிய கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த 1,746 பயனாளிகளுக்கு 43,650 அசில் இன கோழிக்குஞ்சுகளை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு வழங்கிப் பேசினாா்.

முன்னதாக, கடம்பூரையடுத்த சிதம்பராபுரத்தில் ஜெஜெஎம் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீா் வழங்கும் பணி, சிமென்ட் சாலை, ஃபேவா் பிளாக், வாருகால் அமைக்கும் பணி என மொத்தம் ரூ.99 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் விஜயா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அதிகாரி தனபதி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சம்பத், கோட்ட உதவி இயக்குநா் சங்கரநாராயணன், வட்டாட்சியா் மணிகண்டன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, உறுப்பினா்கள் சந்திரசேகா், பிரியா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் மோகன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலா்கள் அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com