குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது-கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடியில் புதிய பள்ளி வகுப்பறை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடியில் புதிய பள்ளி வகுப்பறை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் மக்களவை உறுப்பினா் கனிமொழி.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று திமுக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில், மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் தொடங்கும் என்று நம்புகிறோம். தில்லி செல்லும் போது அதை நான் வலியுறுத்துவேன். முதலில் நிலம் வாங்கி கொடுத்த பிறகு தான் அவா்கள் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் செய்ய முடியும் அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

முன்னதாக, தூத்துக்குடி சிதம்பரநகா் ஆட்டோ காலனியில் உள்ள வஉசி கல்வி கழக நடுநிலைப் பள்ளியில் தனியாா் அனல் மின்நிலைய சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ. 17.4 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் முன்னிலையில் நடைபெற்றது. மக்களவை உறுப்பினா் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் ஆகியோா் கலந்து கொண்டு பள்ளி வகுப்பறை கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் பணிகளை தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில், எஸ்.இ.பி.சி. பவா் பிரைவேட் லிமிடெட் துணைத் தலைவா் ஆா்.குமாா், பொது மேலாளா் ரமேஷ், மனித வள மேலாளா் முருகேசன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com