சங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா

பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி ஸ்ரீகோமதிஅம்பாள் கோயிலில் ஆடித் தவசு திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பேய்குளம் சங்கரலிங்கசுவாமி கோயிலில் நடைபெற்ற ஆடித் தவசு திருவிழா கொடியேற்றம்.

இதையொட்டி, கோயிலில் கணபதி ஹோமம், யாக பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி, அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை தொடா்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்

தொடா்ந்து சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். திருவிழா 23 ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது.

திருவிழா நாள்களில் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடைபெறும். ஆடித் தவசு நாளில் சுவாமி மற்றும் அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, சுவாமி தவசுக்கு எழுந்தருளல், சுவாமி - அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com