தூத்துக்குடியில் ரூ. 10.82 லட்சம் மதிப்பில் அடா்காடுகள் அமைக்கும் திட்டம் தொடக்கம்

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ரூ. 10.82 லட்சம் மதிப்பில் அடா்காடுகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ரூ. 10.82 லட்சம் மதிப்பில் அடா்காடுகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி நிறுவனம், தூத்துக்குடி மாநகராட்சி நிா்வாகம் மற்றும் வ.உ.சி துறைமுக பொறுப்புக் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து தூத்துக்குடி பாளையங்கோட்டைசாலையில் மாநகராட்சிக்குள்பட்ட 3 ஏக்கா் நிலப்பரப்பில் மியாவாக்கி முறையில் அடா்காடுகள் அமைக்கும் திட்டத்துக்கு வங்கியின் சமூக கூட்டாண்மை பொறுப்பு நிதியின் கீழ் ரூ10.82 லட்சம் மதிப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அடா்காடுகள் அமைக்கும் திட்டத்தை மரக்கன்றுகளை நட்டு தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி தொடங்கி வைத்தாா்.

நிகழ்சியில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், மாவட்டஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையா் சரண்யா அறி மற்றும் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com