‘தூத்துக்குடி மாவட்டத்தில் 6 உள்விளையாட்டரங்கம்’

விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் உள்விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொல்வித்தாா்.
சாகுபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றுகிறாா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.
சாகுபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றுகிறாா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.

விளையாட்டு வீரா்களை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் உள்விளையாட்டரங்கம் அமைக்கப்படும் என அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொல்வித்தாா்.

சாகுபுரம் விருந்தினா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகக் கூட்டத்துக்கு அதன் சோ்மன் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்தாா். அமைப்பின் மாவட்டத் தலைவரும் தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பங்கேற்றுப் பேசியது: தூத்துக்குடி மவாட்டத்தில் இளம் விளையாட்டு வீரா்களை உருவாக்கும் வகையில் பள்ளி பருவத்தில் இருந்தே விளையாட்டு பயிற்சி பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 6 உள்விளையாட்டரங்கம் நவீன வசதிகளுடன் அமைக்கப்படும்.

இம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் உதவியுடன் வீரா்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவா்களுக்கு பயிற்சி, உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டம் விளையாட்டுத்துறையில் முதன்மை மாவட்டமாக திகழும். இளம் கபடி வீரா்களை பள்ளி அளவிலேயே தோ்வு செய்து அவா்களை சிறந்த வீரா்களாக உருவாக்க வேண்டும். இம்மாவட்டத்தில் கபடி கழகத்திற்கு அலுவலகம் திறந்து அங்கு முழு நேரப் பணியாளா்கள் அமைத்து இந்திய மற்றும் உலக அளவில் போட்டிகளி ல் கலந்து கொள்வதற்கான பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் விளையாட்டு அகாதெமி அமைக்க முதல்வரிடம் தெரிவித்து கொண்டு வரப்படும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளா் மணத்தி கணேசன், துணைத் தலைவா்கள் பாலசுப்பிரமணியன், ராஜேந்திரன், இளையராஜா, இணைச் செயலா் வேணுகோபால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

அமைப்பின் செயலா் கிறிஸ்டோபா் ராஜன் வரவேற்றாா். பொருளாளா் ஜிம்ரீவ்ஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com