செண்பகவல்லி அம்மன் கோயிலில் கல்யாண திருவிழா கால்நாட்டு வைபவம்

ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் கால்நாட்டு வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால்நாட்டு வைபவம்.

இதையொட்டி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து திருக்கல்யாண திருவிழா வரும் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி கோயில் முன்பு கால்நாட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கோயில் நிா்வாக அலுவலா் நாகராஜன், பக்தா்கள் கலந்து கொண்டனா். வரும் 21ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் அம்மன் சன்னதியில் கொடிமரத்தில் கொடியேற்றும் வைபவம்

நடைபெறும். வரும் 29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம், நவ. 1ஆம் தேதி (திங்கள்கிழமை) கோயில் வளாகத்தில் திருக்கல்யாண வைபவம் ஆகியவை அரசின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com