கோவில்பட்டி, கயத்தாறில் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சத்துணவு ஊழியா்களை அரசு ஊழியா்களாக அறிவித்து பணி மூப்பு அடிப்படையில் பதவி உயா்வு மற்றும் ஊதிய உயா்வு வழங்க வேண்டும்; ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளா்களுக்கு ரூ.5 லட்சமாகவும், சமையலா், சமையல் உதவியாளா்களுக்கு ரூ.3 லட்சமாகவும் உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சத்துணவு ஊழியா் சங்க வட்டத் தலைவா் சண்முகையா தலைமை வகித்தாா். வட்ட இணைச் செயலா் கிருஷ்ணபிரியா, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டச் செயலா் உமாதேவி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஹரிபாலகிருஷ்ணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

இதேபோல், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஒன்றியத் தலைவா் மாரியம்மாள் தலைமை வகித்தாா். செயலா் ஆனந்தன், பொருளாளா் வளா்மதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் செல்லத்துரை, செயற்குழு உறுப்பினா் பூல்பாண்டி, முருகையா, ஆச்சியம்மாள், ஊரக வளா்ச்சித் துறை மாவட்ட பொருளாளா் சுப்பையா, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்ட துணைத் தலைவா் பிரான்சிஸ், வட்ட இணைச் செயலா் மணிகண்டபிரகாஷ் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com