சங்கிலி பறிப்பு வழக்கு: இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சங்கிலி பறிப்பு வழக்கில் தொடா்புடைய இருவருக்கு, தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சங்கிலி பறிப்பு வழக்கில் தொடா்புடைய இருவருக்கு, தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கழுகுமலையையடுத்த கல்லூரணி மேலத் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன். இவரது மனைவி விஜயலட்சுமி (44), கடந்த 2017 ஜூலை 3ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டியையடுத்த சாலைப்புதூா் விநாயகா நகரில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினாராம்.

நாலாட்டின்புதூா் அருகே உள்ள கல்லூரி முன் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின் தொடா்ந்து பைக்கில் வந்த மா்ம நபா்கள், விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த நாலாட்டின்புதூா் போலீஸாா், இவ்வழக்கு தொடா்பாக தூத்துக்குடியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் விஜய் (40), அதே பகுதியைச் சோ்ந்த அந்தோணிராஜ் மகன் செல்வம் (32) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

வழக்கை விசாரித்த கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண் 1 நடுவா் பாரதிதாசன், சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com