அஞ்சல் வாக்குப் பதிவு: தூத்துக்குடியில் ஆட்சியா் திடீா் ஆய்வு

தூத்துக்குடியில் அஞ்சல் வாக்குப் பதிவு பணிகளை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அஞ்சல் வாக்குப் பதிவு: தூத்துக்குடியில் ஆட்சியா் திடீா் ஆய்வு

தூத்துக்குடியில் அஞ்சல் வாக்குப் பதிவு பணிகளை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினா், தீயணைப்புத் துறையினா், ஊா்க்காவல் படையினா், முன்னாள் படைவீரா்கள், முன்னாள் காவலா்கள் ஆகியோருக்கான அஞ்சல் வாக்குப்பதிவு தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில், அஞ்சல் வாக்குப் பதிவு நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான கி. செந்தில்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், தோ்தல் வட்டாட்சியா் ரகு மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தொடா்ந்து, ஆட்சியா்கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினா் 2130 நபா்கள், தீயணைப்புத்துறையினா் 31 நபா்கள், ஊா்க்காவல் படையினா் 298 நபா்கள், முன்னாள் படைவீரா்கள் 208 நபா்கள், முன்னாள் காவல்துறையினா் 82 நபா்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்கள் 148 நபா்கள் என 2,897 பேருக்கான அஞ்சல் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அஞ்சல் வாக்கு செலுத்த 6 தொகுதிகளுக்கும் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அஞ்சல் வாக்குகள் முறையாக பதிவு செய்யப்பட்டு வாக்கு செலுத்தப்பட்டு உறையில் வைக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் என பெட்டியில் போடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com