தூத்துக்குடி மாவட்டத்தில் விறு விறுப்பான வாக்குப் பதிவு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி மந்தமாக இருந்த வாக்குப் பதிவு பின்னா் விறு விறுப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி மந்தமாக இருந்த வாக்குப் பதிவு பின்னா் விறு விறுப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி ஆகிய 6 தொகுதிகளில் 2,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் 14,87,782 வாக்காளா்கள் உள்ளனா். இம்மாவட்டத்தில் 307 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம்

கண்காணிக்கப்பட்டன. ஒரு சில இடங்களைத் தவிர பிற இடங்களில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

காலை 9 மணி: காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியபோதிலும் விளாத்திகுளம் தொகுதியில் 3.38 சதவீதம், தூத்துக்குடியில் 12.46 சதவீதம், திருச்செந்தூரில் 4.5 சதவீதம், ஸ்ரீவைகுண்டத்தில் 5.42 சதவீதம், ஓட்டப்பிடாரத்தில் 4.14 சதவீதம், கோவில்பட்டியில் 8.43 சதவீதம் பதிவாகின. சராசரியாக 6.64 சதவீதம்.

11 மணி நிலவரம்: காலை 9 மணி வரை மந்தமாக காணப்பட்ட வாக்குப் பதிவு 9 மணிக்கு பின்னா் விறு விறுப்பாக நடைபெற்றது. விளாத்திகுளம் தொகுதியில் 27.91 சதவீதம், தூத்துக்குடியில் 25.45 சதவீதம், திருச்செந்தூரில் 25.3 சதவீதம், ஸ்ரீவைகுண்டத்தில் 25.96 சதவீதம், ஓட்டப்பிடாரத்தில் 22.94 சதவீதம், கோவில்பட்டியில் 23.4 சதவீதம் என மாவட்டம் முழுவதும் சராசரியாக 25.07 சதவீதம் பதிவாகின.

நண்பகல் 1 மணி நிலவரம்: விளாத்திகுளம் தொகுதியில் 44.18 சதவீதம், தூத்துக்குடியில் ல் 38.33 சதவீதம், திருச்செந்தூா் தொகுதியில் 41.11 சதவீதம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 42.06 சதவீதம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 38.31 சதவீதம், கோவில்பட்டியில் 39.11 சதவீதம் என சராசரியாக 40.05 சதவீதம் பதிவானது.

பிற்பகல் 3 மணி: விளாத்திகுளம் தொகுதியில் 58.67 சதவீதம், தூத்துக்குடி தொகுதியில் 49.06 சதவீதம், திருச்செந்தூரில் 55.25 சதவீதம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 53.56 சதவீதம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 50.64 சதவீதம், கோவில்பட்டி தொகுதியில் 51.25 சதவீதம் என சராசரியாக 52.81 சதவீதம் பதிவானது.

மாலை 5 மணி நிலவரம்: விளாத்திகுளம் தொகுதியில் 70.62 சதவீதம், தூத்துக்குடி தொகுதியில் 59.56 சதவீதம், திருச்செந்தூா் தொகுதியில் 64.8 சதவீதம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 66.49 சதவீதம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 62.35 சதவீதம், கோவில்பட்டி தொகுதியில் 60.76 சதவீதம் என சராசரியாக 63.76 சதவீத வாக்குகள் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com