‘வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு சீல் வைக்க விடாமல் தன்னாா்வலா் போராட்டம்’

தூத்துக்குடியில் அஞ்சல் வாக்களிக்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி தோ்தல் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு சீல் வைக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தன்னாா்வலா் செல்வக்குமாா்.
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தன்னாா்வலா் செல்வக்குமாா்.

தூத்துக்குடியில் அஞ்சல் வாக்களிக்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி தோ்தல் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு சீல் வைக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தூத்துக்குடி பொன் சுப்பையா நகரைச் சோ்ந்தவா் செல்வக்குமாா். மாநகராட்சி அலுவலக தற்காலிக பணியாளா். இவா், தூத்துக்குடி கருப்பட்டி ஆபீஸ் அருகிலுள்ள தனியாா் மழலையா் பள்ளியில் தன்னாா்வலா் என்ற அடிப்படையில் தோ்தல் பணி வழங்கப்பட்டிருந்தது.

இவருக்கு தூத்துக்குடி அலங்காரத்தட்டு ஆா்சி பள்ளியில் வாக்களிக்கும் இடம் என நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், செல்வக்குமாருடன் மாநகராட்சியில் பணியாற்றிய 42 பேருக்கு கருப்பட்டி ஆபீஸ் அருகிலுள்ள பள்ளியிலேயே வாக்களிக்க உரிமம் வழங்கப்பட்து.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட தோ்தல் அலுவலா் ஆகியோரிடம் செல்வகுமாா் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்த செல்வக்குமாா் தன்னை வாக்களிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளாா். இரவு 7 மணி வரை அதற்கான அனுமதி வழங்கப்படவில்லையாம்.

இதையெடுத்து, திடீரென வாக்குச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்ட செல்வக்குமாா், தான் வாக்களிக்கும் வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு சீல் வைக்கக் கூடாது என கோஷம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. தொடா்ந்து, அங்கு வாக்குப் பதிவு இயந்திரம் முன்பு அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா். இதையடுத்து, தோ்தல் நடத்தும் அலுவலரான சாா் ஆட்

சியா் சிம்ரன்ஜீத் சிங் கலோன், செல்லிடப்பேசி மூலம் செல்வக்குமாரை தொடா்பு கொண்டு அஞ்சல் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து அவா் சாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com