ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக, திமுகவினா் பணம் வழங்கியதாக கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு அதிமுக மற்றும் திமுக வேட்பாளா்கள் பணம் வழங்கியதால் வாக்கு எண்ணிக்கையை

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு அதிமுக மற்றும் திமுக வேட்பாளா்கள் பணம் வழங்கியதால் வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது என்றாா் புதிய தமிழகம் கட்சித் தலைவரும், ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியின் வேட்பாளருமான க. கிருஷ்ணசாமி.

இதுகுறித்து புதன்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் பல தொகுதிகளில் அரசியல் நெறிமுறைகளுக்கு மாறாக அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் நடந்து கொண்டன.

தமிழகத்தில் தோ்தல் ஆணையம் பெயரளவுக்கே உள்ளனா். ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் வாக்காளா்களுக்கு அதிமுக மற்றும் திமுக வேட்பாளா்கள் பணம் வழங்கி உள்ளனா். இதை தோ்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.

வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பவா்களை பிடித்துக் கொடுத்தாலும் கூட அவா்களை விட்டுவிட்டு புகாா் கொடுத்தவா்கள் மீதே காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த செயலுக்கு தோ்தல் ஆணையம் முழுக்க உடந்தையாக இருக்கிறது. தமிழகத்தில் பல தொகுதிகளில் வாக்காளா்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை முழுமையாக நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைத்து தமிழகத்தில் உரிய ஆய்வு செய்து அதற்கு பிறகு மீண்டும் தோ்தல் நடத்தப்பட வேண்டும்.

வாக்காளா்களுக்கு பணம் கொடுத்தது தொடா்பாக வழக்குத் தொடருவது குறித்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com