தூத்துக்குடியில் 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி ஊரகப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் பொன்னரசு தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, புதூா் பாண்டியாபுரம் அருகேயுள்ள தனியாா் கிடங்கில் சந்தேகப்படும் வகையில் லாரி நின்றுகொண்டிருந்ததாம்.

இதையடுத்து, அந்த லாரி ஓட்டுநரிடம் துணைக் காவல் கண்காணிப்பாளா் பொன்னரசு விசாரணை செய்ததில், அவா் சரியான தகவல்களை கூறாததால், போலீஸாா் லாரி மற்றும் அந்த கிடங்கில் சோதனை மேற்கொண்டனா். சோதனையின்போது, போலி வாகன எண் பதிவுடன் லாரியில் ரேஷன் அரிசியை ஏற்றிக் கொண்டு கேரளத்துக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 டன் ரேஷன் அரிசி மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட இருந்த லாரி மற்றும் மினி லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, சிப்காட் காவல் நிலையத்துக்கு கொண்டுச் சென்றனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com