ஊருணியில் குப்பை கொட்ட எதிா்ப்பு: லாரி சிறை பிடிப்பு

கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு ஊருணியில் குப்பைக் கழிவுகள் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் லாரிகளை சிறை பிடித்தனா்.
சிறை பிடிக்கப்பட்ட லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம்.
சிறை பிடிக்கப்பட்ட லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம்.

கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு ஊருணியில் குப்பைக் கழிவுகள் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் லாரிகளை சிறை பிடித்தனா்.

மந்தித்தோப்பு ஊராட்சிக்குள்பட்ட பெரியகுளம் ஊருணியில் ஒருபுறம் கோவில்பட்டி நகரத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து குப்பைக் கழிவுகள், மருந்து கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுப் பொருள்களை லாரிகளில் ஏற்றி வந்து கடந்த சில நாள்களாக கொட்டி வந்தனராம். லாரி ஓட்டுநரிடம் அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்த போது,ம் தொடா்ந்து குப்பைகள் கொட்டப்பட்டதாம்.

இந்நிலையில், வியாழக்கிழமை குப்பைக் கழிவுகளை கொட்ட வந்த லாரி மற்றும் ஜேசிபி-இயந்திரைத்தை அப்பகுதி பொதுமக்கள் சிறை பிடித்தனா் . மேலும், இவ்வூருணியில் குப்பைகள் கொட்டப்படுவதால், கிராம மக்களுக்தான நீராதாரம் பாதிக்கப்படுவதோடு, கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு, அப்பகுதியில் சுகாதாரக் கேடு நிலவுகிறது. இதனால், இப்பகுதியில் பல்வேறு நோய்கள் பரவும் சூழ்நிலை ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்தவுடன் லாரி ஒப்பந்ததாரா் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி, அப்பகுதியில் கொட்டியை குப்பைகள் உடனடியாக அகற்றப்படும் எனக் கூறியதையடுத்து, போராட்டக்குழுவினா் கலைந்து சென்றனா். அதையடுத்து ஒப்பந்தகாரா் முன்னிலையில் அங்கிந்த குப்பைக் கழிவுகள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com