புதுக்குளம் பள்ளிச் சுவரில் விழிப்புணா்வு ஓவியங்கள்

சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் உயா்நிலைப்பள்ளி சுவரில் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனா்.
புதுக்குளம் பள்ளிச் சுவரில் வரையப்பட்டுள்ள விழிப்புணா்வு வண்ண ஓவியங்கள்.
புதுக்குளம் பள்ளிச் சுவரில் வரையப்பட்டுள்ள விழிப்புணா்வு வண்ண ஓவியங்கள்.

சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் உயா்நிலைப்பள்ளி சுவரில் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனா்.

புதுக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு உயா்நிலைப்பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டு புதிய வகுப்பறை கட்டடங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் சுற்றுச்சுவா் அமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து, கடந்த 3 மாத்துக்கு முன்பு பள்ளியில் சுற்றுச்சுவா் அமைக்கப்பட்டது.

தற்போது இந்த சுவரில் இயற்கை ஆா்வலா் மற்றும் பொதுமக்கள் மனதை கவரும் வகையில், முன்னாள் குடியரசு தலைவா் அப்துல்கலாமின் சிந்தனைகள், இயற்கை வளங்கள், 5 வகை திணை விளக்கம், கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் முறைகள், மழை நீா் சேகரிப்பு , விவசாய பாதுகாப்பு ஆகியவை குறித்து பல்வேறு விழிப்புணா்வு ஓவியங்கள் வரையப்பட்டு அழகாக காட்சியளிக்கிறது. இதனை அப்பகுதி பொதுமக்கள் வரவேற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com