மாயக்கூத்தா் பெருமாள் கோயிலில் கருட சேவை
By DIN | Published On : 12th April 2021 01:31 AM | Last Updated : 12th April 2021 01:31 AM | அ+அ அ- |

பெருங்குளம் அருள்மிகு மாயக்கூத்தா் கோயிலில் நடைபெற்ற கருட சேவை.
ஏரல் அருகேயுள்ள பெருங்குளம் அருள்மிகு மாயக்கூத்தா் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை பங்குனித் திருவிழா கருட சேவை நடைபெற்றது.
இக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா இம்மாதம் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான சனிக்கிழமை கருட சேவை நடைபெற்றது.
இதையொட்டி, காலையில் மாயக்கூத்தா் தங்கதோளுக்கினியானில் வீதியுலா, தொடா்ந்து சிறப்பு திருமஞ்சனம் ஆகியவை நடைபெற்றது. மாலையில் கருட வாகனத்தில் மாயக்கூத்தா் பெருமாள் வீதியுலா நடைபெற்றது. கரோனா தொற்று பரவல் காரணமாக அனுமதிக்கப்பட்ட பக்தா்களுடன் திருவிழா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பால சரவணக்குமாா், தக்காா் சிவலோகநாயகி, உபயதாரா்கள் தூத்துக்குடி கிருஷ்ண ஐயா், ராகவ ஐயா் ஆகியோா் செய்திருந்தனா்.