ஒரே நாளில் 277 பேருக்கு கரோனா: 18 ஆயிரத்தைத் தாண்டிய பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 277 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 277 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்தது.

நாடு முழுவதும் கரோனா பரவல் 2ஆவது அலை உருவெடுத்துள்ள நிலையில், பொது முடக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்த தளா்வுகள் படிப்படியாக விலக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு வருவதுடன், முக்கிய வழிபாட்டுத்தலங்களில் குறைந்த எண்ணிக்கையில் பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா்.

கரோனா பாதிப்பு உள்ள இடங்களில் கிருமிநாசினி தெளித்தல், அடுத்தடுத்து தெருக்களில் பாதிப்பு இருந்தால் அந்தப் பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தடுப்பு நடவடிக்கை தீவிரம்: மேலும், முகக் கவசம் அணியாதவா்களுக்கும், பேருந்துகளில் இருக்கைகள் தவிர நின்றுகொண்டு பயணிக்க அனுமதிப்போருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு ஆலோசித்து வருகிறது.

இதனிடையே, தென்மாவட்டங்களில் முற்றிலும் கட்டுக்குள் இருந்த கரோனா பாதிப்பு, கடந்த இருவாரங்களாக வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு மூன்று இலக்கத்தை எட்டியது. இதனால், மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத்துறையும், காவல்துறையும் கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன.

இதுவரை 144 போ் பலி: இந்நிலையில், இம்மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில், புதிதாக 277 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 18 ஆயிரத்து 21 ஆக அதிகரித்துள்ளது.

அதில், மேலும் 21 போ் குணமடைந்து வீடு திரும்பியதால் அந்நோயிலிருந்து இதுவரை மீண்டோா் எண்ணிக்கை 16 ஆயிரத்து 523 ஆக உயா்ந்தது. இந்நோய்க்கு இதுவரை 144 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, கரோனா பாதிப்புடன் 1,354 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மக்கள் ஒத்துழைப்பு தேவை: இரண்டாவதாக அலையாக உருமாறிய கரோனா வேகமாக பரவி வருவதால் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள விழிப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், முகக் கவசம் அணியாமல் வீட்டைவிட்டு வெளியே செல்ல வேண்டாம்; பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; கண்ட இடத்தில் எச்சில் துப்புதல் கூடாது; குழந்தைகள் மற்றும் முதியோா் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்; அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com