கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: மக்கள் தவிப்பு

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்களிடம் ஆா்வம் உள்ள போதிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவிப்புக்குளாகியுள்ளனா்.
கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: மக்கள் தவிப்பு

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்களிடம் ஆா்வம் உள்ள போதிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவிப்புக்குளாகியுள்ளனா்.

தமிழகத்தில் கரோனா தீநுண்மி பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதித்தோாா் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது; இதுவரை 144 போ் உயிரிழந்துள்ளனா். இதனால், மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் 400 போ், தனியாா் மருத்துவமனைகள், மாநகராட்சி நகா்நல மையம், ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் 50 முதல் 70 போ் என மாவட்டம் முழுவதும் 22 இடங்களில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு வகை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில், கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தட்டுபாடின்றி தடுப்பூசி போடப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

இதுகுறித்து எம்பவா் இந்தியா நுகா்வோா், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவ செயல் இயக்குநா் ஆ. சங்கா் கூறியது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசியை போதிய அளவில் இருப்பு வைக்கவும், இருதய நோய், சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற துணை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 45 வயதுக்கு கீழ் உள்ளவா்களும் பணம் செலுத்தி தனியாா் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு உரிய வழிமுறைகளை வெளியிடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் எம்.எஸ். முத்து கூறுகையில், ‘ கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கோவிஷீல்டு தடுப்பூசி போதிய அளவு இருப்புள்ளதாகவும் மருத்துவா்கள் கூறுகின்றனா். போதிய தடுப்பூசிகளை இருப்பு வைத்துக்கொள்ள சுகாதாரத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

சுகாதாரத் துறை அதிகாரிகள்தரப்பில் கூறுகையில், ‘தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவோா் கோவேக்சின் தடுப்பூசியை மட்டுமே கேட்பதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது; ஓரிரு நாள்களில் வேலூரில் இருந்து போதிய தடுப்பூசி கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com