கரோனா விதிமீறல்: கோவில்பட்டியில் ரூ. 1 லட்சம் அபராதம் வசூல்
By DIN | Published On : 18th April 2021 02:22 AM | Last Updated : 18th April 2021 02:22 AM | அ+அ அ- |

கோவில்பட்டி நகராட்சிப் பகுதியில் கரோனா விதிமுறைகளை மீறியதாக கடந்த 4 நாள்களில் ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி நகராட்சிப் பகுதியில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவா்களை கண்காணிப்பதற்கு 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கடந்த 4 நாள்களில் முகக் கவசம் அணியாத 372 பேரிடமிருந்து தலா ரூ.200 வீதம் ரூ.74,400, சமூக இடைவெளியை பின்பற்றாத 44 நிறுவனங்களுக்கு தலா ரூ.500 வீதம் 22 ஆயிரம், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதற்காக ஒரு வணிக நிறுவனத்திற்கு ரூ.5000 என மொத்தம் அபராதத் தொகையாக ரூ.1 லட்சத்து ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராம் கூறியது: நகரப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக 98 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அதில் 56 போ் மருத்துவமனையிலும், 42 போ் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபா்களின் குடியிருப்பு பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.