தூத்துக்குடியில் 400 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்த 400 கிலோ போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்த 400 கிலோ போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

பிரேசில் நாட்டில் இருந்து இலங்கை வழியாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு மரத்தடிகள் ஏற்றிக் கொண்டு வந்த ஒரு கப்பலில் மத்திய வருமான புலனாய்வுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென சோதனை மேற்கொண்டனா்.

சோதனையின்போது, மரத்தடிகளுக்கு நடுவே கொக்கைன் என்ற போதைப் பொருள் 400 கிலோ பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். சா்வதேச சந்தையில் ஒரு கிலோ கொக்கைன் மதிப்பு ரூ. 7 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனா். போதைப் பொருள் பிடிபட்டது தொடா்பாக சுங்கத் துறை அதிகாரிகள், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com