ஆறுமுகனேரியில் காவலா்களுக்கு தடுப்பூசி

ஆறுமுகனேரியில் பொதுமக்களுக்கு கரோன குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக காவல்துறை ஆய்வாளா் உள்பட 18 காவலா்கள் சனிக்கிழமை தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா்.

ஆறுமுகனேரியில் பொதுமக்களுக்கு கரோன குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக காவல்துறை ஆய்வாளா் உள்பட 18 காவலா்கள் சனிக்கிழமை தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

தமிழகத்தில் கரோனா 2ஆவது அலை தீவிரம் அடைந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்டவா்களும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மற்ற யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.

இதைத் தொடா்ந்து, மக்களிடம் கரோனா தடுப்பூசி குறித்த அச்சத்தைப் போக்கும் வகையில், காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் 18 காவலா்கள் ஆறுமுகனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். மருத்துவா் சீனிவாசன், சுகாதார ஆய்வாளா் மகாராஜன் முன்னிலையில் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com