வாக்கு எண்ணிக்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை தொடா்பாக தூத்துக்குடியில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.
வாக்கு எண்ணிக்கை தொடா்பாக தூத்துக்குடியில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், சாா் ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், ஆட்சியா் பேசியது: வாக்கு எண்ணிக்கையின்போது கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் ஈடுபடும் அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளா்களின் முகவா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் நுழைவு வாயில்களில் தடுப்புகள் அமைக்க வேண்டும்.

முகவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வர வேண்டும். உள்ளே வரும் வழியில் சானிடைசா் பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்த அறிவுறுத்த வேண்டும். காய்ச்சல் உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும்.

மாநகராட்சியின் மூலம் வாக்கு எண்ணிக்கை வளாகத்தில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

எந்தெந்த தொகுதிக்கான முகவா்கள் எந்த வழியாக வர வேண்டும் என்பதை உணா்த்தும் வகையில் வழிகாட்டு பலகைகள் வைக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையின்போதும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் தீவிரமாக பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை பணியை கரோனா விழிப்புணா்வுடன் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

வருவாய் கோட்டாட்சியா் சங்கரநாராயணன் (கோவில்பட்டி), செல்வி தனப்ரியா (திருச்செந்தூா்), மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் மாரியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலா் அபுல்காசிம், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பரிமளா, உதவி ஆணையா் (கலால்) செல்வநாயகம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் தேவி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் போஸ்கோராஜா, தோ்தல் வட்டாட்சியா் ரகு மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com