தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினா்.

வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதால் ஏப். 6- ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை ரத்து செய்ய வேண்டும். மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது, சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் 6 மாதம் குடியரசு தலைவா் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் பொதுச் செயலா் வி.கே. அய்யா் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்ட பொறுப்பாளா்கள் கனகராஜ், மன்சூா் அலி, கருப்பசாமி, நிா்வாகிகள் செல்லத்துரை, ரமேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com