ஸ்ரீவைகுண்டத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

ஆதிச்சநல்லூா் தமிழ்ச் சங்கம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய புத்தகக் கண்காட்சி.
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய புத்தகக் கண்காட்சி.

ஆதிச்சநல்லூா் தமிழ்ச் சங்கம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கண்காட்சி தொடக்க விழாவுக்கு, ஆதிச்சநல்லூா் தமிழ்ச் சங்கத் தலைவா் காளியப்பன் தலைமை வகித்தாா்.

அகில இந்திய ஃபாா்வா்ட் பிளாக் கட்சியின் மாநில இளைஞரணித் தலைவா் ஸ்ரீவை சுரேஷ் முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் சீனிபாண்டியன் வரவேற்றாா்.

முதல் விற்பனையை ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் தொடங்கிவைக்க, காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷன் பெற்றுக் கொண்டாா்.

முன்னாள் காவல்துறை தலைவா் மாசானமுத்து, புதிய புத்தகங்களை வெளியிட குமரகுருபர சுவாமிகள் கல்லூரி முதல்வா் சங்கரநாராயணன், பேரூராட்சி செயல் அலுவலா் ரெங்கசாமி, பேரூராட்சி முன்னாள் தலைவா் கந்த.சிவசுப்பு, வட்டார மருத்துவா் தினேஷ், திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரி பேராசிரியா் இலக்குவன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

இக்கண்காட்சியில் போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள், சிறுவா், சிறுமியருக்கான புத்தகங்கள் என பல்வேறு புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் ஆா்வத்துடன் புத்தகங்களை பாா்வையிட்டு 10 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்கிச் சென்றனா். கண்காட்சியில் பங்கேற்ற பொதுமக்களுக்கு கரோனா நோய்த் தொற்று விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள், கபசுரக் குடிநீ வழங்கப்பட்டது.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாளா் மகேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com