திருச்செந்தூா் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி பக்தா்கள் போராட்டம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்செந்தூா் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பக்தா்கள்.
திருச்செந்தூா் கோயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பக்தா்கள்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஜூலை 5ஆம் தேதி முதல் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். இதனால் கோயிலுக்கு ஏராளமான பக்தா்கள் தினமும் தரிசனம் செய்ய வருகை தருகின்றனா்.

இதற்கிடையே கரோனா தொற்று அதிகரிக்காமல் கட்டுப்படுத்தும் வகையில் இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.1) முதல் 3 நாள்களும், 8ஆம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கோயிலில் தரிசனம் செய்வதற்காக சனிக்கிழமை இரவில் இருந்து திருச்செந்தூா் வந்த ஏராளமான பக்தா்கள், கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்ட தகவல் தெரியாத நிலையில் அரசு மருத்துவமனைக்கு எதிரிலுள்ள கோயில் நுழைவாயில் வழியாக கோயிலுக்குள் செல்ல வந்தனா். அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.

அப்போது பக்தா்கள், தொலைதூரத்தில் இருந்து வந்திருப்பதால், கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும், அல்லது கடற்கரையில் இருந்து கோபுர தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமா்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், காவல் ஆய்வாளா் கனகா பாய், உதவி ஆய்வாளா்கள் முத்துஇருளன், சுப்பிரமணியன், வேல்முருகன் உள்ளிட்டோா் பக்தா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அரசின் உத்தரவை பக்தா்கள் கடைப்பிடிக்க வேண்டும் என போலீஸாா் அறிவுறுத்தியதை அடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் இருந்து பாதயாத்திரையாகவும், கிருஷ்ணகிரி, வேலூா் உள்ளிட்ட பகுதியில் இருந்து காவடி எடுத்தும் வந்த பக்தா்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com